கம்பா நதி தீரத்தில்…..
பல்லவி
கம்பா நதி தீரத்தில் வீற்றிருப்பவளை
அம்பாள் பவானியை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
உம்பர் முனிவர் பணி கேசவன் சோதரியை
சம்பு கபாலியின் மனங்கவரீச்வரியை
சரணம்
மும்மலமகற்றும் ஆனந்தவல்லியை
அம்புய கரத்தாளை அரவணிந்தவளை
சும்ப நிசும்பரை மாய்த்த மலைமகளை
கும்ப முனிக்கருள் செய்த மகேச்வரியை
காமகோடி பீட நிவாசினியை
காமனுக்கருளிய காமேச்வரியை
சோமசுந்தரர் போற்றும் மீனாக்ஷியை
மாமேரு தனிலமர்ந்த லலிதாம்பிகையை
மூகனுக்கருளிய காமாக்ஷி தேவியை
பாகம் பிரியாளைப் பர்வதவர்த்தினியை
யோகமாயையை லோகநாயகியை
சேகரனிடப்பாகமமர்ந்த சேகரியை
மங்களாம்பிகையை மாதங்கி சங்கரியை
திங்கள் பிறையணிந்த குங்குமவல்லியை
பங்கய பதமுடைய பரமேச்வரியை
அங்கயற்கண்ணியை அகிலாண்டேச்வரியை
மஞ்சுபாஷிணியை மரகதவல்லியை
பஞ்சஞ்சு மெல்லடியாள் பவதாரிணியை
தஞ்சமடைந்தோரைக் காக்கும் தயாபரியை
வெஞ்சமரி மகிடனை வீழ்த்திய மாகாளியை
லீலைகள் புரிந்திடும் திரிபுரசுந்தரியை
காலனை உதைத்த காலுக்குடையவளை
நீல நிறத்தழகியை நித்யகல்யாணியை
வாலைக் குமரியை பாலாம்பிகையை
Blessed with the wealth of flower arrows of Manmatha,
Is roaming on the sand banks of the river Kampa,
Makes the God shiva drunk with passion.
No comments:
Post a Comment