நமச்சிவாயனை…..
பல்லவி
நமச்சிவாயனை அகச்தீச்வரனை
உமாமகேச்வரனைப் போற்றித் துதித்தேன்
துரிதம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
குமரன் கணபதி நந்தி கணங்கள்
உமையவள் பிரமன் நாரதர் மற்றும்
சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
எமனைக்காலாலுதைத்த ஈசனை
லக்ஷ்மி நாராயணன் கேசவன் நேசனை
சரணம்
உமையொருபாகனை நந்தி வாகனனை
சமர் செய்து திரிபுரனை எரித்த முக்கண்ணனை
தமக்கிணையென ஒருவரில்லாதவனை
இமவான் மகளை மணந்த சதாசிவனை
அமைதியான பசுமை வயல்களும்
அழகிய வண்டாடும் பூங்காவும் சோலைகளும்
மறையோதும் வேதியரும் உழவரும் நிறைந்த
வையச்சேரி திருத்தலத்தில் கோயில் கொண்ட
No comments:
Post a Comment