Tuesday, 14 November 2023

மொழி பேமில்லாத…..

 


     மொழி பேமில்லாத…..


                   பல்லவி


 மொழிபேதமில்லாத கடவுளே உன் சொந்த

 மொழியெதுவோ உரைத்திடுவாய் கோவிந்தா


                அனுபல்லவி


 பழி பாவத்திற்கஞ்சாத வல்லரக்கர் பலரை

 அழித்த பரந்தாமனே ஶ்ரீமன் நாராயணனே


                   சரணம்


அழித்தல் படைத்தல் காத்தலென்ற மூன்று

தொழில் புரிந்திடும் பரம பத நாதனே

ஆழியும் சங்குமேந்தும் அழகிய கேசவனே

விழியருள் தந்தெனை ஆண்டிடுவாய் நீயே

No comments:

Post a Comment