Friday, 1 December 2023

“ தர்மம் “

 

                    “ தர்மம் “ 


         கோடீஸ்வரரொருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று பெரும்புயல் வீசத் துவங்கியது. கப்பல் மூழ்கிவிடும் நிலை. பிராயணிகளெல்லோரும் இறைவனிடம் பிராத்திக்கத் தொடங்கினார்கள். கோடீஸ்வரன் சற்று நேரம் சும்மாயிருந்தான். ஆனால் புயலின் வேகமதிகரித்துக் கொண்டே வந்தது. கப்பல் மூழ்கி இறந்து விடுவோமோ என்ற பயம் தொற்றிக் கொண்டது. உடனே அவனும் ‘ இறைவா, எங்களைக் காப்பாற்று, காப்பாற்றிவிட்டால் ,என் மாளிகையை விற்று அதில் வரும் பணத்தை ஏழை எளியவர்க்கு தர்மம்  செய்துவிடுகிறேன்’ என்ற உரக்கச் சொன்னான். பயணம் செய்யும் எல்லோர் காதிலும் அது விழுந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் சொல்லி வைத்தாற் போலப் புயல் அடங்கியது. எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. கோடீஸ்வரனுக்கு மட்டும் மிக வருத்தமாகிவிட்டது. அட டா அவசரப் பட்டுவிட்டோமே, கொஞ்சம் பொறுத்திருந்தால் எப்படியும் புயல் அமைதியாகி இருக்கும். வீணாக எல்லார் காதிலும் விழும்படியாக உரத்த பிரார்த்தனை வேறு செய்து விட்டோமே என்று வருந்தினான்.  இதற்குள் இவன் வேண்டுதல் பற்றி (கரையேறிவந்த பின்) ஊரே பேசிக் கொண்டது.  வேறு வழியின்றி இவனும் தன் மாளிகையை விற்பதென்று முடிவுக்கு வந்தான். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மாளிகையை விற்க அவனொரு வித்தியாசமான விளம்பரம் செய்தான்.அந்த மாளிகை வாயிலில் ஒரு பூனையைக் கட்டிவைத்தான். அந்தப் பூனையின் விலை ஒரு கோடி ரூபாய். அந்த மாளிகையின் விலை ஒரு ரூபாய். ஆனல் இரண்டையும் சேர்த்துத் தான் வாங்க வேண்டுமென்பதுதான் அவன் விளம்பர விதி. ஏனிந்தப் பைத்தியக்காரத்தனமென்பது யாருக்கும் புரியவில்லை. அதனாலென்ன வாங்குபவரைப் பொறுத்த வரையில் இரண்டுமொன்றுதான்.  ஒருவன் அந்தப் பூனையையும் மாளிகையையும் வாங்கிக் கொண்டான். கோடீச்வரன் பூனையின் விலையான கோடி ரூபாயைத் தன் கணக்கில் போட்டுக் கொண்டான். மாளிகையின் விலையான ஒரு ரூபாயைத் தன் வேண்டுதலின் படி ஏழைகளுக்கு தர்மம் செய்தான்😀

No comments:

Post a Comment