உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்…..
பல்லவி
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கண்ணனே கேசவனே
கள்ளப் பர்வைதனில் என்ன சொல்ல விழைகிறாய்
அனுபல்லவி
பிள்ளைக் கனியமுதே கண்ணா பேசும் பொற்சித்திரமே
மெள்ள உனைத்தழுவ எந்தன் உள்ளம் துடிக்குதடா
சரணம்
அள்ளக்குறையாத அருள் மழை பொழிபவனே
வெள்ளமெனக் கருணை தரும் வேய்ங்குழல் வேந்தனன்றோ
துள்ளி வருமாவினங்கள் மேய்க்கும் ஆமருவியப்பனன்றோ
பள்ளிகொண்டு பாற்கடலில் துயிலும் நாரணனும் நீயேயன்றோ
No comments:
Post a Comment