शंका चक्र गधा पने द्वारका निलय अच्युत गोविंद पुंडरीकाक्ष रक्षमम् शारंगथम"
சங்கும் சக்கரமுமேந்தும்…..
பல்லவி
சங்கும் சக்கரமுமேந்தும் கரத்தோனை
வங்கக்கடல் கடைந்த கேசவனைத் துதித்தேன்
அனுபல்லவி
தங்கும் பொருளளிக்கும் திருமகளைத் தன் மார்பில்
தாங்கும் மதுசூதனனை தாமோதரனை
சரணம்
எங்கும் நிறை கமலக்கண்ணனை கோவிந்தனை
மங்காத புகழ் மேவும் துவாரகையிலுறைவோனை
பொங்கரவணை துயிலும் ஶ்ரீமன் நாராயணனை
பங்கயநாபனைப் பணிந்தேன் எனக்கருள்வாயென
No comments:
Post a Comment