பலவித மலர்களை…..
பல்லவி
பலவித மலர்களை விரும்பி ஏற்றிடும் ஶ்ரீ
லலிதாம்பிகையை வணங்கித் துதித்தேன்
துரிதம்
மலர்கள் முல்லை மல்லி தாமரை
துளபம் ஜாதி தாழம் அல்லியென
அனுபல்லவி
நிலவணிந்த உமையாள் கேசவன் சோதரியை
அலகிலா விளையாடல் பல புரிந்த ஈச்வரியை
சரணம்
புலவர்கள் முனிவர்கள் அறவோரந்தணர்
பலரும் துதித்திடும் ராஜ ராஜேச்வரியை
மலர் பல நிறைந்த கடம்ப வனந்தனில்
நிலைத்திருப்பவளின் நாமங்களோதி
No comments:
Post a Comment