*நடேஶ்வரீ* நட - ஈஶ்வரீ- நடேசருடைய மனைவி.
சித்தென்னும் பரவெளியில் நர்த்தனம் புரியும் ஈஶ்வரீ. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுடன் கூட ஆடும் சிவகாம சுந்தரி. சிதம்பரம் என்றால் அந்தப் பெயர் கொண்ட க்ஷேத்ரம் என்னும் பொருளோடு கூட ஹ்ருதயாகாஸம் என்ற பொருளும் உண்டு. அப்படி இருவரும் ஆடும் நடனத்தை ஆச்சார்யர் ஆதி சங்கரர் சௌந்தர்யலஹரியின் 41 வது ஸ்லோகத்தில் இவ்வாறு உரைக்கிறார் :
*தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மன்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்*
தாயே உன்னுடைய மூலாதாரமென்னும் சக்கரத்தில் நர்த்தனம் புரிபவளான ஸமயா தேவியோடு சிருங்காரம் முதலிய நவரசங்கள் பொருந்திய தாண்டவமென்னும் நடனம் புரிகின்ற மஹாபைரவமென்னும் உன் ரூபத்தை தியானம் செய்கிறேன்.
நடேசனாருடன் நடனம் புரியும் ஈஸ்வரியை வணங்குவோம். *ௐ நடேஶ்வர்யை
நடனமிடும் ஈச்வரியே…..
பல்லவி
நடனமிடும் ஈச்வரியே நடேச்வரியே
நடராஜன் துணைவியுனை நமஸ்கரித்துத் துதித்தேன்
அனுபல்லவி
பட அரவின் மீதுறங்கும் கேசவன் சோதரியே
விடமுண்ட கண்டன் சிவனிடம் கொண்டவளே
சரணம்
புடமிட்ட பொன்னே மாமணியே தாயே
நடராஜனுடனாடும் சிவகாமசுந்தரியேயுன்
நவரசங்கள் கூடிய சிருங்கார தாண்டவத்தை
உவகையுடன் கண்டு உனதடி பணிந்து
No comments:
Post a Comment