கரங்களில்வீணையேந்தும்…..
பல்லவி
கரங்களில் வீணையேந்தும் தேவியைத் துதித்தேன்
அரனயனரி பணி திரிபுரசுந்தரியை
துரிதம்
சுரபதி ரதிபதி தேவசேனாபதி
கணபதியனைவரும் வணங்கிடும் கௌரியை
அனுபல்லவி
சிரசில் பிறையணிந்த கேசவன் சோதரியை
பரமேச்வரியை பர்வத குமாரியை
சரணம்
வரம் தரும் கரமும் அபய கரமும் காட்டும்
மரகத நிறத்தவளை மலரேந்தும் கரத்தவளை
புரமெரித்தபரமன் மனங்கவர் நாயகியை
கரத்தினில் கமல மலர் வைத்திருக்குமீச்வரியை
माणिकवीणामुपलयन्तेन
मदालसां मंजुलवाग्विलासाम्।
महेंद्रनीलद्युतिकोमलाङ्गीं
मातंगकन्यां सततं स्मरामि ॥1॥
No comments:
Post a Comment