Saturday, 9 December 2023

ஞாலம் போற்றும்…..

 #பிரதோஷம்_சிறப்பு_பதிவு. 

#காலபைரவர்

பைரவா பைரவா காலபைரவா

காசிகால பைரவா மகாகால பைரவா

ஜெய் பைரவா ஜெய் பைரவா

சேத்ர பாலகா ஜெய் காலபைரவா

#தேவார_பதிகத்தில்_பைரவர்:

“விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்

சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.”

– (#திருநாவுக்கரசர்)

#பைரவர்_ஸ்லோகம்பைரவருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.


                   ஞாலம் போற்றும்…..


                                 பல்லவி

             ஞாலம் போற்றும் கால பைரவனை

             சீலமுடன் துதித்தேன் அவனருள் பெறவே

                               அனுபல்லவி

             ஞாலமுண்ட வாயன் கேசவன் நேசனை

             ஆலமுண்ட நீலகண்டனை காலகாலனை

                                   சரணம்

             சூலம்  டமருகமேந்திய கரத்துடன்

             கோலாகலமாக உரித்த வேழத்தின்

             தோலினை உமையவளஞ்சும் வண்ணம்

             மேலே போர்த்திக் காட்சியளித்திடும்

                                துரிதம்

             ஏலவார் குழலி நந்தி கணங்கள்      

             காலனிந்திரன் நரர் சுரர் மற்றும்       

             வேலன் கணபதி தும்புரு நாரதர்

             மாலயன் முனிவர்கள் கரம் பணிந்தேத்தும் 

                            


   

No comments:

Post a Comment