Friday, 1 December 2023

கனகமலைதனில்……

 


पल्लवि 
कनक शैल विहारिणि श्री 
काम कोटि बाले सुशीले 

अनुपल्लवि 
वनज भव हरि नुते देवि 
हिम गिरिजे ललिते सततं 
विनतम् माम् परिपालय शङ्कर
वनिते सति महा त्रिपुर सुन्दरि (कनक)

चरणम् 1
कम्बु कण्ठि कञ्ज सदृश वदने 
करि राज गमने मणि सदने 
शम्बर विदारि तोषिणि शिव 
शङ्करि सदा मधुर भाषिणि (कनक)

चरणम् 2
चण्ड मुण्ड खण्डन पण्डिते-इक्षु 
दण्ड कोदण्ड मण्डित पाणि
पुण्डरीक नयन-अर्चित पदे त्रि-
पुर वासिनि शिवे हर विलासिनि (कनक)

चरणम् 3
श्यामळा-अम्बिके भव-अब्धि तरणे 
श्याम कृष्ण परिपालिनि जननि 
कामित-अर्थ फल दायिके 
कामाक्षि सकल लोक साक्षि (कनक)

தஞ்சாவூர் ஸ்ரீ பங்காரு காமாக்ஷி என்று சொன்னதும் த்ரிபங்கியாக கையில் கிளி கொண்டு ஒய்யாரமாக பேரெழிலாக காட்சி கொடுக்கும் பரதேவதைதான் மனக்கண்ணில் தோன்றுவாள்.அப்படி நம் பொற்கொடியை சிந்திக்கும் போது தவறாமல் சிந்தையில் உதிப்பவர்,சங்கீத த்ரிமூர்த்தியரில் அம்பாளை தவிர வேறொரு தெய்வதை பாடியறியாத ஸ்ரீச்யாம க்ருஷ்ணர்.ஸதா ஸர்வ காலமும் தேவீக்கு உவப்பான ஸ்ரீவித்யா உபாஸனையும்,ஸ்ரீபங்காரு காமாக்ஷி பூஜையும்,தேவியை நாதோபாஸனையால் ஆராதனை செய்வதே இவரது வாழ்க்கை.

             பங்காரு காமாக்ஷி ஸந்நதியில் அவர் ஸ்வர்ணாம்பாளை ஹ்ருதயத்தில் இருத்தி,வாக்கால் பாடியதை கேட்டு உருகாதவர் அக்காலத்தில் எவரும் இருந்திருக்கமாட்டார்கள்.

              "ச்யாம க்ருஷ்ண ஸோதரி" என முத்ரை கொண்டே தன் க்ருதிகள் அமைத்தார்.ஸதா காமாக்ஷி..காமாக்ஷி!! என அவளை மட்டுமே ஸ்மரித்தவர்.இவரின் சங்கீத நடை மிக அலாதியானது.தாயும் மகனும் உரையாடுவது போல நிறுத்தி நிதானமாக சௌக காலத்திலும்,மிஸ்ர சாபு தாளத்திலும்தான் பெரும்பாலும் அமைத்துள்ளார்.

        இன்று அனுபவிக்க உள்ள க்ருதி "புன்னாகவராளி" ராகத்தில் அமைந்துள்ளது.இந்த ராகத்தை கேட்டால் பெரும்பாலும் நம்மில் பலருக்கும் ஸர்ப்பம்தான் நினைவுக்கு வரும்.எப்படி மகுடியால் பாம்பு மயங்குமோ அது போல இந்த க்ருதியை கேட்டால் நாமும் நம்மை மறந்து அவளாக ஆவோம் என் ச்யாமா இந்த ராகத்தில் அமைத்தார் போலும்.

        ஸதா கனகவல்லியாம் தங்க காமாக்ஷியை பூஜிப்பதால்,ஸ்வர்ணகிரி மத்தியில் இருப்பவளாக க்ருதியை தொடங்கியிருக்கிறார்.


                                  கனகமலைதனில்……


                                          பல்லவி

                            கனகமலைதனில் வீற்றிருப்பவளே

                            தினமுனைத் துதித்தேன் பங்காரு காமாக்ஷியே

                                        அனுபல்லவி                    

                          தனம் கல்வி நல்வாழ்வனைத்தும் தருபவளே

                          அனங்கனுக்கருள் செய்த திரிபுரசுந்தரியே

                                             சரணம்

                           பண்டனை மகிடனை மாய்த்த மகேச்வரியே

                           அண்டசராச்சரமனைத்தையுமாள்பவளே

                            புண்டரீகாக்ஷன் கேசவன் சோதரியே     

                            தொண்டர்களைக் காக்குமகிலாண்டேச்வரியே    

 

                           சங்குக் கழுத்தும் கமலமலரிதழும் 

                           திங்கள் பிறைநுதலும் மங்கள வதனமும்

                           அங்கப் பள பளப்பும் ஆனையின் நடையும்

                           சங்கரன் பங்கிலுறை மங்களாம்பிகையே


                           உம்பர் முனிவர் பணி கல்யாணியே உமையே

                           செம்பொன் மேனியன் சிவபெருமான் நாயகியே

                           வெம்பவக்கடல் கடக்க உதவிடுமீச்வரியே

                           அம்புயமே கௌரி ஶ்ரீலலிதாம்பிகையே                       

                           


           

                                                       


  

No comments:

Post a Comment