‘அம்பாள் கருணையே வடிவானவள். யாரெல்லாம் அவளைச் சரணடைகிறார்களோ, அவளை ஒருபோதும் கைவிடாதவள். நம்மைப் பெற்றெடுத்த தாயைப் போல கருணையே உருவானவள்’ என்று சிலாகிக்கிறது புராணம்.
தேவி உபாஸனை என்றே இருக்கிறது. வழிபாடுகளில், சக்தி உபாஸனை என்றே இருக்கிறது. பெண் தெய்வ வழிபாடு என்பது மிக மிக அளப்பரிய சக்தியைக் கொடுக்கக் கூடியது.
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். அபிராமி அந்தாதி சொல்லுங்கள்.
அல்லது காதால் கேட்டுக்கொண்டு, அம்பாளை வணங்குங்கள். அகிலத்தையும் காத்தருளும் அம்பிகை, நம்மையும் நம் குடும்பத்தையும் காத்தருளுவாள்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
கருணைக் கடலெனும்….
பல்லவி
கருணைக்கடலெனும் கமாக்ஷியைப் பணிவோம்
அருள் தரும் கடைவிழிப் பார்வையைப் பெறுவோம்
அனுபல்லவி
திருமால் கேசவன் அன்பு சோதரி
கருணாகரன் சிவன் மனங்கவரீச்வரி
சரணம்
பெருமைக்குரிய அபிராமி அந்தாதியும்
வருமிடர் தீர்க்குமவளாயிரம் நாமமுமோதி
இருவினை களந்திடுமவளைத்துதித்திட
தருணமிதுவே தாயவள் புகழ் பாட
No comments:
Post a Comment