சந்திரமௌலீச்வரனை சிவனை….
பல்லவி
சந்திரமௌலீச்வரனை சிவனை
வந்தனை புரிந்தேன் பிக்கானேர் தலத்தில்
துரிதம்
இந்திரன் நரர் சுரர் நந்தி கணங்கள்
கந்தன் கணபதி அனுமன் வணங்கிடும்
அனுபல்லவி
இந்தினிளம்பிறையணிந்த ஈசனை
உந்தி கமலன் கேசவன் நேசனை
சரணம்
மந்திரமூர்த்தியை மகாதேவனை
ஐந்தெழுத்தானை ஆலவாயழகனை
நந்தி வாகனனை நமச்சிவாயனை
அந்தமுமாதியுமில்லாத பரம்பொருளை
न पुण्यं न पापं न सौख्यं न दु:खं न मन्त्रो न तीर्थं न वेदो न यज्ञः |
अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्द रूप: शिवोऽहं शिवोऽहम् ||
No comments:
Post a Comment