Saturday, 9 December 2023

முல்லா கதைகள்



                             முல்லா கதைகள்


          ஒரு முறை ஒரு சமயச்சொற்பொழிவாளரொருவர் தனது அழகான குதிரையைக் கட்டி வைத்து விட்டு தேவாலயத்துக்குள் சென்றார். அப்போது அந்தப் பக்கமாக வந்த முல்லா அந்தக் குதிரையினருகே சென்று என்ன அழகான குதிரை என்று அதன் அழகை வியந்து அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தாராம். அச்சமயம் அங்கு வந்த இன்னொருவன் ‘ முல்லா இது உங்கள் குதிரையா , என்று கேட்டான். இவ்வளவு அழகான குதிரையை தன்னுடையதில்லை என்று சொல்ல மனமில்லாமல், அதை நினைத்து யோசித்த முல்லா ஆமாம் இது என் குதிரைதான் என்று முதல் பொய்யைச்சொன்னாராம். அப்படியானால் இதை எனக்கு விற்றுவிடுகிறீர்களா, நல்ல விலை தருகிறேன், என்றாராம் வந்தவர். முல்லாவுக்கு தர்ம சங்கடமாகிவுட்டது. யோசித்தார்.அவன் வாங்க முடியாத விலையைச் சொன்னால் போச்சு என்று அவருக்கொரு யோசனை தோன்றிற்று. உடனே ‘பத்தாயிரம் ரூபாய்’ என்று சொல்லிவிட்டார். தன் குதிரைதான் என்ற பொய்யைக் காப்பாற்றி ஆக வேண்டுமே! 

  ஆனால் வந்தவனோ, சரி, பத்தாயிரம் தருகிறேன், இந்த அற்புதமான குதிரைக் கேற்ற விலைதான் என்று சொல்லி, உடனே, ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக் கொடுத்துவிட்டான். முல்லா நன்கு யோசித்தான். பத்தாயிரம் சும்மா வருகிறது. உள்ளே போன குதிரையின் சொந்தக்காரனோ தூங்குகிறான் போல. சரி விற்று விடலாமென முடிவுசெய்து குதிரையையவிழ்த்துக் கொடுத்தனுப்பினார். அவனும் குதிரையை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். பணத்தை எண்ணி பாக்கெட்டில் வைக்கும் நேரம் பார்த்து குமிரையின் சொந்தக்காரன் வெளியே வந்தான். சற்றும் யோசிக்க நேரமில்லாது தவித்த முல்லா; சட்டென்று தன் வாய்க்குள் கொஞ்சம் புல்லை அள்ளிப் போட்டுக்கொண்டு,தன் கழுத்தைச் சுற்றி கயிற்றைக் கட்டிக் கொண்டான்.  குதிரையின் சொந்தக்காரனோ பயந்தும் குழம்பியும் முல்லா  அருகில் வந்து , என் குதிரை எங்கே? நீங்கள் யார்? என்றான். அதற்கு பதிலாக முல்லா சொன்னான், ‘ நான் தான் உன் குதிரை. நான் விபச்சாரம் செய்தாக என் மீது இறைவன் கோபித்துக் கொண்டு என்னைக் குதிரையாக்கிவிட்டான். இப்போது எனக்கு சாப விமோசனம் கிடைத்து விட்டது. மறுபடியும் மனிமனாகி விட்டேன் என்றான். 

அதைக்கேட்ட அந்த சொற்பொழிவாளனுக்கு மிகுந்த பயமாக்கிவிட்டது. தெய்வ கோபம் ஒரு மனிதனை மிருகமாக்கிவிடுமா!? உடனேயே மண்டியுட்டு இறைவனிடம் தன் பாவங்களுக்காகத் தன்னை மன்னிக்கும்படி மனமுருகப் பிரார்த்தித்தான். பிறகு முல்லாவைப் பார்த்து, ‘சகோதரனே நடந்தது நடந்து விட்டது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குப் போய்விடுங்கள். நான் சந்தையில் போய் வேறு குதிரை வாங்கிக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டு சந்தையை நோக்கி நடந்தான். 

அங்கே போனால் சந்தையில் அவனுடைய குதிரையே நின்று கொண்டிர்தது விற்பதற்காக!! அதைப் பார்த்ததும் அவனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. குதிரையின் அருகில் சென்று மிக மெதுவாக அதன் காதில், ‘ என்ன முல்லா மறபடியுமா? இவ்வளவு சீக்கிரமாகவா? ‘ என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.





No comments:

Post a Comment