நந்தீசனை விடைவாகனனை……
பல்லவி
நந்தீசனை விடைவாகனனை
சிந்தையில் நினைந்து சேவடி பணிந்தேன்
துரிதம்
இந்திரன் நரர் சுரர் ஈசனின் கணங்களும்
மந்திரமோதும் தவமுனியோரும்
சந்திரன் சூரியன் கோள்களனைத்தும்
வந்தனை புரிந்து சந்ததம் துதித்திடும்
அனுபல்லவி
முந்தியோர் நாளில் திருமால் கேசவன்
நந்தியாய் உருவெடுத்து மால் விடையானவனை
சரணம்
இந்திரனும் நந்தியின் வடிவெடுத்து போக
நந்தியென பெயர் பெற்று சிவனருள் பெற்றானை
உந்தி கமலமதில் வீற்றிருக்கும் நான்முகனும்
நந்தியென்றாகி வேத நந்தியானவனை
“शृङ्गी भृङ्गी रिटिस्तुण्डी नन्दिको नन्दिकेश्वरः”
नन्दिकेश महाभाग शिवध्यानपरायण।
No comments:
Post a Comment