அன்னபூரணி…..
பல்லவி
அன்னபூரணி உன்னைத் துதித்தேன்
சென்னகேசவன் சோதரி எனை நீ ஆதரி
அனுபல்லவி
உன்னருள் இல்லையேல் உலகம் உய்யுமோ
பன்னகாபரணன் விச்வேச்வரன் நாயகி
சரணம்
மின்னலைப் பழிக்குமிடையுடையவளே
புன்னகை தவழும் திருமுகத்தாளே
பொன்னெழில் மேனியில் காட்சி தருபவளே
இன்னலிடர் களையும் திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment