கோபுரங்கள் சாய்வதில்லை….
பல்லவி
கோபுரங்கள் சாய்வதில்லை கோமானே என்றும்
ஆபத்திருளறச்செய்யும் தெய்வமுறை
அனுபல்லவி
நூபரமணிந்த ஶ்ரீலலிதாம்பிகையும்
கோபர்கள் போற்றும் கேசவனுமுறையும்
சரணம்
தீபங்கள் தோரணங்கள் வண்ணக் கோலங்களை
தூபங்கள் மலர் மாலை நாதஸ்வர மேளங்கள்
சோபனம் சொல்லும் இன்னிசை முழக்கங்கள்
பூபாலர் வருகையுடன் கோலாகலமாய்த் திகழும்
No comments:
Post a Comment