நமஸ்கரித்தேன் ……
பல்லவி
நமஸ்கரித்தேன் உனையே ஶ்ரீராமா என்றும்
சமமெனத் தனக்கொருவர் இல்லாத கடவுளே
அனுபல்லவி
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
உமாபதியும் போற்றிடும் கேசவனே
சரணம்
இமவான் மகளான பார்வதி தேவிக்கு
நமச்சிவயன் சொன்னாருன் மகிமையை
ஶ்ரீராமா என்ற ஒரு நாமம் சொன்னால் போதும்
ஓராயிரம் நாமமுரைத்த பலன் கிடைக்குமென
No comments:
Post a Comment