மரா மரா மந்திரத்தை…..
பல்லவி
மராமரா மந்தி்ரத்தை ராமாவென மாற்றிய நான்
சராசரியல்ல பராபரமே எனக்கருள்வாய்
அனுபல்லவி
முராரி கேசவனே முகுந்தா கோவிந்தா
பராரியல்ல உனைப் போற்றிப் பாடும் நான்
சரணம்
கராரவிந்தம் காண்பித்தபயம் தரும்
சுராசுரர் வணங்கும் பரம பதநாதனே
சராசரங்களனைத்தையுமாட்டுவிக்கும்
புராண புருஷனே ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment