கழலடி நிழலொன்றே……
பல்லவி
கழலடி நிழலொன்றே போதும் கண்ணனே
அழகனே கேசவனே உனைத்துதிக்குமெனக்குன்
அனுபல்லவி
அழலேந்தும் நெற்றிக் கண்ணன் நேசனே
குழலாதும் மாதவனே பாலகோபாலனே
சரணம்
தழுவிடும் கோபியர்கள் மனங்கவர்ந்தவனே
தொழுதிடுமடியார்க்கு நலமளிகும் முகுந்தனே
சுழல் சக்கரமேந்தும் ஶ்ரீமன் நாராயணனே
பழவினைப் பயன் தொலைய நீயேயென் துணை
No comments:
Post a Comment