சொந்த வடிவமென்றொன்று…..
பல்லவி
சொந்த வடிவமென்றொன்று இல்லாதவனே
எந்த வடிவில் வந்தாலும் துணை நீயே
அனுபல்லவி
உந்தி கமலனே பாண்டுரங்கனே
அந்த ரங்கனும் நீதானே எனையாண்டவனே
சரணம்
பந்தபாசத் தளைகளைக் களைபவனே
மந்தகாசப் புன்னகை புரிபவனே
இந்தளூர் தலத்துறை பரிமளரங்கனே
சிந்தையில் வைத்துன் சீரடி போற்றினேன்
தந்தை சொல் காக்க கானகம் சென்ற
சுந்தர ராமனுமரங்கனும் நீயே
விந்தையாய் லீலைகள் பல புரிந்தவனே
அந்தரங்கமான என் சென்ன கேசவனே
No comments:
Post a Comment