திருமோகூராப்தனை…..
பல்லவி
திருமோகூராப்தனைக் கேசவனைத் துதித்தேன்
திருமகள் மோகனவல்லி உடனுறை
அனுபல்லவி
திருப்பாற்கடல் துயிலும் திருநாராயணனை
வருமிடர் பவப்பிணி துயரனைத்தும் தீர்ப்பவனை
சரணம்
அரக்கரைப் பொருத த்துடிக்கும் திண்தோளும்
நிறம் பவளமெனத் திகழதரமும் கமலக்கண்களும்
சிறந்த தடாகம் போல் குளிர்ந்த திருவடிகளும்
பரந்து விரிந்த திருமார்புமுடைய
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடம்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்அரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.
Blest are we with Tirumōkūr, near at hand,
Our sure haven, with many a lovely garden around,
Where dwells our mighty Lord, Who the Rākṣasa hordes
Would ever annihilate, the Supreme One with comely shoulders four,
With coral lips and lotus eyes, Whose lovely pair
Of feet are like unto a tank, cool and clear.
நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார். தெளிந்த தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும் அப்போதலர்ந்த செந்தாமரை போலேயிருக்கிற திருக்கண்களையும் பவளம் போலே சிவந்த திருவதரத்தையுமுடையனாய் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கவல்ல நான்கு திருத்தோள்களை உடையனாய் அத் திருத்தோள்களுக்கு இரை போரும்படியாக எதிரிட்டு வருகிற அசுரர்களைத் துணிக்குமவனான எம்பெருமான் நித்யவாஸம் செய்தருளுமிடமாய் சோலைகள் சூழ்ந்ததான திருமோகூரிப்பதியானது கட்டிற்று; இதுவே நமக்கு ரக்ஷகம்; ரக்ஷகம் தேடி நிற்கிற நாம் கிட்டப் பெற்றோம் இத்திருப்பதியை என்றாயிற்று
No comments:
Post a Comment