“ புத்திசாலி பக்தனும் இறைவனும் “
**********
இறைவனிடம் ஒருவன் கேட்டானாம், “ ஆண்டவனே, ஒரு கோடி ரூபாய் என்பது உன்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு?!” ஆண்டவன் சொன்னாராம், “ ஒரு ரூபாய்” , அடுத்து அவன் கேட்டான், “ ஆண்டவனே, ஒரு யுகம் என்பது உனக்கெவ்வளவு காலம்?” ஆண்டவன் சொன்னாராம், “ஒரு நிமிடம்”, பக்தனுக்குப் புரிந்தது. அவன் ஆண்டவனிடம் , இறைவா, “எனக்கு ஒரே ஒரு ரூபாய் கொடேன்” என்றானாம். உடனே ஆண்டவன், “ அதற்கென்ன, இதோ ஒரு நிமிடத்தில்” என்றானாம்!
No comments:
Post a Comment