பொய்யா மொழி…..
பல்லவி
பொய்யா மொழி கீதையைத் தந்தவன் நீயே
அய்யா கேசவனே உனதடி பணிந்தேன்
அனுபல்லவி
உய்யும் வகையை ஓதிய பரம்பொருளே
மெய்ப்பொருளே நிலவொளியைப் பழிக்கும் திருமாலே
சரணம்
உய்யக் கொண்டானெனும் பெயருடைய மாதவனே
தையல் திருமகளை மார்பில் சுமப்பவனே
துய்யனே துணை நின்றெனைக் காக்கும் மாயனே
பையத்துயிலும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment