புதுவீடு புகப்போகும்…..
பல்லவி
புது வீடு புகப்போகும் மாரியம்மா உனக்கு
மெதுவாக நல்வரவு சொல்ல விழைந்தேன்
அனுபல்லவி
மதுகைடபரை மாய்த்த கேசவன் சோதரியே
அதிசயங்கள் பல செய்த ஈச்வரியே தாயே
பல்லவி
இதமுடன் சமயபுரம் தனிலிருக்கும் மாரியும்
மதுரகாளியென சிறுவாச்சூர் பதிதனிலும்
கதிரொளியின் கீழமர்ந்த வெக்களியும் நீயே
துதிப்பவர்க்கருளும் கருமாரியும் நீயே
No comments:
Post a Comment