கும்பிட இரு கையுண்டு…..
பல்லவி
கும்பிட இரு கையுண்டு அம்புயமே காமாக்ஷி
செம்பவள வாயழகியதைக் கூப்பியுனைத் துதித்தேன்
அனுபல்லவி
செம்பொன்னரங்கன் கேசவன் சோதரி
சம்பு கபாலியின் மனங்கவர் நாயகி
துரிதம்
தும்புரு நாரதர் சுகசனகாதியர்
நான்முகனிந்திரன் ரதிபதி மற்றும்
கலைமகள் அலைமகள் கந்தன் கணபதி
அனைவரும் வணங்கிடும் வணங்கிடும்
சரணம்
அம்பைப் பழிக்கும் கூர்விழியாளே
உன்னழகு என்னிரு விழிக்கடங்கவில்லை
உம்பர் முனிவர் தொழும் உனதடியே பணிந்தேன்
எம்பெருமாட்டியே எனக்கருள் புரிவாயே
No comments:
Post a Comment