ஶ்ரீராமன் நீயிருக்க..…..
பல்லவி
ஶ்ரீராமன் நீயிருக்க வேறு துணை எனக்கெதற்கு
பாரோர் பணிந்தேத்துமுன் பதமே துதித்தேன்
அனுபல்லவி
தீராவினை தீர்க்கும் திருவரங்கனும் நீயே
ஆராவமுதனெனும் சாரங்பாணியும் நீயே
சரணம்
பேரருளாளனெனும் வரதராஜனும் நீயே
மாரனைப் பிரமனைப் படைத்தவனும் நீயே
கோர சம்சாரக் கடல் கடக்க உதவிடும்
நாராயணனும் நீயே கேசவனே மாதவனே
No comments:
Post a Comment