ஆசனத்தை …….
பல்லவி
ஆசனத்தை சிம்மாசனமாக்கிய கேசவனை
வாசுதேவனை நரசிம்மனைப் பணி்தேன்
அனுபல்லவி
நேசமுடன் திருமகளை மார்பில் வைத்திருப்பவனை
கோசலை மைந்தனாயவதரித்த ராமனை
சரணம்
ஆசாபாசத்தளைகளை விலகச்செய்யும்
மாசிலாமணியைக் கமலநாபனை
காசினியோர் கொண்டாடும் ஶ்ரீமன்நாராயணனை
வாச மலர் தூவி மனமாரத்துதித்தித்து
No comments:
Post a Comment