தெய்வம் வேறில்லை….
பல்லவி
தெய்வம் வேறில்லை ஶ்ரீராமா உனைப் போல
அய்யனே இக் கலியுகத்திலெமைக் காக்க
அனுபல்லவி
மெய்ப்பொருள் நீயே கேசவனே மாதவனே
உய்விக்க வந்த புண்ணியனே உத்தமனே
சரணம்
வையத்து வாழும் மக்களனைவரும்
கை தொழுதேத்தும் பரம்பொருள் நீயே
செய்யவள் சீதையை மணமுடித்தவனே
பையத்துயிலும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment