Wednesday, 24 January 2024

#திருச்சக்கரம் #நடுவே……

 

#திருச்சக்கரம் #நடுவே……


                  பல்லவி


திருச்சக்கரம் நடுவே வீற்றிருப்பவளை

ஶ்ரீமகா திரிபுர சுந்தரியைத்துதித்தேன்


            அனுபல்லவி


பெருங்கடல் நடுவே மணித்வீப மண்டபத்தில்

பெருமை மிகு அழகிய சிந்தாமணி இல்லத்தில்


                சரணம்


மனம் வாக்கிற்கெட்டாத பரம்பொருளை

கனவிலும் நினைவிலும் மறைந்திருப்பவளை

குணம் உருவம் நாம மற்றவளை

தினமும் நாம் செயும் செயலிருப்பவளை


வேத வேதாந்தங்கள் அறிய முடியாதவளை

நாதமாய் நர சுரராய் நரபதியாய் பஞ்சபூதமய்

யாதுமான பரதேவதையாயிருப்பவளை

ஓதக்கடல் துயிலும் கேசவன் சோதரியை


कदम्बवनवासिनीं कनकवल्लकीधारिणीं

महार्हमणिहारिणीं मुखसमुल्लसद्वारुणीम् ।

दयाविभवकारिणीं विशदलोचनीं चारिणीं

त्रिलोचनकुटुम्बिनीं त्रिपुरसुन्दरीमाश्रये ॥

No comments:

Post a Comment