वागीश्वरी सहचरी नियमेन लक्ष्मीः
भ्रूवल्लरीवशकरी भुवनानि गेहम् ।
रूपं त्रिलोकनयनामृतमम्ब तेषां
कामाक्षि येषु तव वीक्षणपारतन्त्री ॥
வாகீஶ்வரீ ஸஹசரீ நியமேன லக்ஷ்மீ:
ப்ரூவல்லரீ வஶகரீ புவனானி கேஹம் |
ரூபம் த்ரிலோக நயனாம்ருதம் அம்ப தேஷாம்
காமாக்ஷி யேஷு தவ வீக்ஷண பாரதந்த்ரீ
கடாக்ஷ சதகம்.
அம்பிகே! காமாக்ஷி! எவரிடம் உனது கடாக்ஷமானது ஏற்படுகிறதோ, அவர்களுக்கு கலைமகள் தோழியாகிறாள்; திருமகள் அவர்களது கண் ஜாடையை அநுஸரித்து நடப்பவளாக அவர்களுக்கு வசப்படுகிறாள்; ஈரேழுலகும் அவர்கள் இருப்பிடமாகிறது; அவர்களுடைய ரூபமானது மூவுலகினரின் கண்களுக்கு அம்ருதமாகவும் ஏற்படுகிறது.
காமாக்ஷியுந்தன்……
பல்லவி
காமாக்ஷியுந்தன் அருட்பார்வை பட்டவர்
பூமியிலனைவர்க்குமமுதமாகிறார்
அனுபல்லவி
தாமோதரன் கேசவன் சோதரி
காமனுக்கருள் செய்த சங்கரி ஈச்வரி
சரணம்
மலைமகளுனது விழியருள் பெற்றவர்க்கு
கலைமகளவரது தோழியாகிறாள்
அலைமகளவர்களின் விழி வழி நடக்கிறாள்
உலகேழுமவர்களின் இருப்பிடமாகிறது
No comments:
Post a Comment