* ஒரே பராசக்தி தான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது.
* துர்கையாக வீரம், சக்தி எல்லாம் தருகிறது; லக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது; சரஸ்வதியாகி ஞானம் தருகிறது.
* சாக்ஷாத் பராசக்தியை காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பா⁴வத்திலியே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்து விடும். இந்த நாளில் waterproof என்று சொல்வது போல், நாம் "காம ப்ரூஃப், சோகப் ப்ரூஃப்" எல்லாமாக, சாந்தமாக ஆவோம். * "காத்தாயி" என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனி என்பது என் ஊகம்.
* பட்டாரிகை என்று பெரிய ஶ்ரீவித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத் தான், நம் கிராம மக்கள் "பிடாரி" என்று சொல்லி பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் "பட்டாரிகா மான்யம்" என்பதைப் "பிடாரி மானியம்" என்று திரித்துக் குறிப்பிடுவதால் இதை உணரலாம்.
* இவ்வாறே, "பேச்சாயி" என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான (தாயான) வாக்தேவி சரஸ்வதியைத் தான் குறிப்பிடுகிறது.
* இங்ஙனம், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ரூபமாக உள்ள அந்த பராசக்தியைப் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக! 🙏🙏🙏🙏
அனைத்தும் நீயே
பல்லவி
அனைத்தும் நீயே ஶ்ரீலலிதாம்பிகையே
எனக்கருள் புரிவாயே கேசவன் சோதரியே
அனுப்பல்லவி
நினைப்பவர் மனங்களில் நடம் புரிபவளே
சுனை நீராய்ச்சுரக்கும் கருணை ஊற்றே
சரணம்
சரச்வதி,துர்கை,லக்ஷ்மியும், நீயே
அரனயனரி பணி திரிபுரசுந்தரியே
கிராம தேவதை காத்தாயி, பேச்சாயி
பராசக்தியும் நீயே பரம்பொருளும் நீயே
No comments:
Post a Comment