சின்னவனே…..
பல்லவி
சின்னவனே அயோத்தியையாளும் மன்னவனே
புன்னகை தவழும் ஶ்ரீராமா உனைத்துதித்தேன்
அனுபல்லவி
சென்ன கேசவனே ஶ்ரீமன் நாராயணனே
உன்னருளின்றியோரணுவுமசையுமோ
சரணம்
இன்னலிடர் நீக்கும் இனிவனே ரகுராமா
தன்னிகரில்லாத தனிப்பெருந்தெய்வமே
பொன்னி நதிக்கரையில் கிடந்துறங்குமரங்கனே
தென்னிலங்கையரக்கனின் சிரம் கொய்தவனே
No comments:
Post a Comment