தாமரை நாபனே……..
பல்லவி
தாமரை நாபனே ஶ்ரீராமா உனைத்
தூமலர் தூவி தினம் துதித்தேன்
அனுபல்லவி
மாமறைகள் போற்றும் மாதவனே கேசவனே
பூமகள் சீதையை மணம் புரிந்த ரகுவரனே
சரணம்
வாமனனாய் வந்து மூவடி நிலம் கேட்ட
கோமகனே அழகு கோதண்டபாணியே
நாமமாயிரமுடைய நாராயணனே
தாமதமின்றியே எனையாண்டருள்வாயென
No comments:
Post a Comment