Wednesday, 10 January 2024

ஶ்ரீராமன் நாமம்…..

 


                           ஶ்ரீராமன் நாமம்…..


                             பல்லவி

              ஶ்ரீராமன்  நாமம் ஒலிக்குமிடமெலாம்

              மாறாமலமர்ந்திருக்கும் மாருதியைத் துதித்தேன்

                          அனுபல்லவி

              ஓராயிரம் நாமமுடைய கேசவன்

              காரார் குழலாள் ஜானகி நாயகன்

                              சரணம்

              பாரோர் பணிந்தேத்தும் பரமதயாளன்

              ஏரார்ந்த கண்ணி கோசலையின் மைந்தன்

              ஆராவமுதன் அரவிந்தநாபன்

              போராடி அரக்கரை வதைத்த ஜெயராமன்

              

              


எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் ' இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள்


यत्र यत्र रघुनाथकीर्तनं

तत्र तत्र कृतमस्तकांजलिम् | 
वाष्पवारिपरिपूर्णालोचनं
मारुतिं नमत राक्षसान्तकम् 

No comments:

Post a Comment