காமாக்ஷி ஶ்ரீலலிதே…….
பல்லவி
காமாக்ஷி ஶ்ரீலலிதே உனையே துதித்தேன்
தாமதமின்றியே எனக்கருள வேண்டினேன்
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவன் சோதரியே
கோமானேகாம்பரேச்வரனின் நாயகியே
சரணம்
பாசாங்குசமேந்திய கமல கரத்தாளே
பீதாம்பரமும் பொன்னகையும் புனைந்தவளே
ஈரெட்டெழுத்து நாமம் கொண்ட பத்மாசினியே
ஓர் சொல் மந்திரத்திலுலகாளுமுத்தமியே
"பாசாங்குசௌ ச வரதாபய பாணி பத்மாம்
பீதாம்பரீம் கனகபூஷண பூஷிதாங்கீம்
ஶ்ரீஷோடஷாக்ஷரகலாவ்ருத பத்ம வாஸீம்
ஏகாக்ஷரீம் த்ரிபுவனீம் ஹ்ருதி பாவயாமி
No comments:
Post a Comment