துயரறு சுடரடி…..
பல்லவி
துயரறு சுடரடி துதித்தேன் ஶ்ரீராமா
உயர் நலம் தந்தெனக்கருள்வாய் நீயே
அனுபல்லவி
அயர்வறும் அமரர்களதிபதி வணங்கிடும்
புயபலமுடைய கேசவனே மாதவனே
சரணம்
கயவர க்கரின் கதை முடித்தவனே
கயல்விழி சீதையின் கரம் பிடித்தவனே
தையலாளகலிகையின் சாபம் தீர்த்தவனே
தயரதன் மைந்தனே தரணிதரனே
நயமுடன் பேசும் தகைமையுடையவனே
பயமற்றவனே பரதனுக்கு மூத்தவனே
தயக்கமின்றி குகனுடன் தோழமை பூண்டவனே
வியந்திடும் வண்ணம் பல லீலைகள் புரிந்தவனே
உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.
No comments:
Post a Comment