குழந்தை முருகனை…..
பல்லவி
குழந்தை முருகனைக் கும்பிட்டு மகிழ்ந்தேன்
மழலை மொழி பேசும் கார்த்திகேயனை
அனுபல்லவி
அழலேந்தும் நெற்றிக்கண்ணன் மைந்தனை
சுழல் சக்கரமேந்தும் கேசவன் மருகனை
சரணம்
பழகு தமிழ் மொழியில் பாமாலை புனைந்து
அழகனவனது அருள் வேண்டித் துதித்து
பழவினைப் பயன்கள் தொலைந்திட வேண்டியே
நிழலவன் கழலடி நிழலெனத் துணிந்தே
No comments:
Post a Comment