அனைத்தும் நீயெனவே…..
பல்லவி
அனைத்தும் நீயெனவே குருவாயுரப்பா
உனைப் பணிந்தேனே குருவாயுரப்பா
அனுபல்லவி
வினைப் பயன் களைந்திடும் கேசவனே மாதவனே
உனையன்றி வேறு தெய்வம் எனக்கில்லை இப்புவியில்
சரணம்
தினையளவுனையே துதித்தாலும் போதும்
பனையளவு பலன் தரும் நாராயணனே
சுனை நீராய்க் கருணை சுரப்பவன் நீயே
எனையாட்கொள்ள வேண்டுமெனத்துதித்தேன்
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
No comments:
Post a Comment