Thursday, 4 January 2024

கானமிசைத்தவனை……


                             கானமிசைத்தவனை……


                                        பல்லவி

                     கானமிசைத்தவனைப் போற்றிப் பாடும்

                     ஞானமில்லையெனும் கவலை வேண்டாம்

                                      அனுபல்லவி

                     தேனெனத் தித்திக்கும் கேசவனின் சில

                     வானளவு சிறந்த நாமங்களோது போதும்

                                        சரணம்

                     கானகம் சென்ற ராமனின் நாமம் தனை

                     ஆனவரை தினமும் சொன்னாலே போதும்

                     மானம் காத்த ஶ்ரீ க்ருஷணனின் நாமமே

                     தானெனுமகந்தையழித்து நல்வழிகாட்டும்


                     மோனத் தவம் செய்த துருவனுக்கு நாரதர்

                     ஞானம் பெற ஓதிய நாராயண நாமமே

                     ஊனம் களைந்து மன இருள் நீக்கிடும்

                     பானமெனப் பருகிடச் செய்யும் நாமம்     

                             

                     தானாகவே வந்து தயவளிக்கும் திருநாமம்      

                    கோனந்த கோவிந்தனொரு நாமம் மட்டுமே  

                    மோனத் தவம் செய்யும் முனிவரும் போற்றும் நாமம்      

                    கானமியற்றி அன்னமய்யன் துதித்த நாமம்     

                  

                    தூணைப் பிளந்து வந்த ஆளரியின் நாமம்

                    பாலன் பிரகலாதனுக்கருள் செய்த நாமம்

                    நாளையென்பதே இல்லா நரசிம்மன்  நாமம்                                                                

                    ஓயாது திருமலையில் ஒலிக்கின்ற திருநாமம்          

                             

 கலியுகத்தில் முக்திக்கு_ஒரே_வழி

நாமசங்கீர்த்தனம் என்பது அனைவரும் அறிந்ததே.

பாட்டு பாடத் தெரியலையே !!!! கவலை வேண்டாம்....

பஜனை பண்ணத் தெரியலையே!!!! வருத்தம் வேண்டாம்.....

சமஸ்க்ருத ஸ்லோகங்களை பிழையில்லாமல் உச்சரிக்க

முடியலயே !!!!!!ஆதங்கம் வேண்டாம்....

இந்த 5 நாமங்கள் மட்டும் போதும். நம்மை உய்விக்க......

பகவான் "தான் எத்தனை எளிமையானவர், "கருணையானவர்..எப்படியாவது மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா??? என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிராறாம்.

 1 முதல் நாமம்... ""ராமா""

ராமா ராமா ராமா என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் முடியுமோ மனதில் அத்தனை தடவை சொல்லுங்கள் மனதில் சஞ்சலங்கள், துக்கங்கள், குழப்பங்கள் வரும் போது தனியாக ஓரிடத்தில் அமர்ந்து மனதிற்குள் ராம" நாமத்தைச் சொல்லுங்கள். மனம் அமைதி அடைவது நிச்சயம்....

ராமா என்ற நாமத்தைக் கேட்டாலே அனுமன்

அந்த இடத்தில் வந்து அமர்ந்து விடுகிறானாம்.


2 வது நாமம்...."க்ருஷ்ணா""

இந்த நாமமே பாண்டவர்களைக்  கூடவே இருந்து காத்தது.....

குந்தி க்ருஷ்ணனிடம் கேட்ட வரம் "க்ருஷ்ணா!!!

எனக்கு கஷ்டங்களைக் கொடு!!! அப்போதுதான்

உன்னை மறவாமல் இருப்பேன்."... என்றாள்........

கஷ்டங்களைத் தாங்கும் ,மன வலிமையைக்

கொடுக்கும் ,நாமம்........


3வது நாமம்.... "நாராயணா""

சிறுவன் ப்ரஹ்லாதனை காத்த,நாமம்.

எத்தனை இடர்கள் அவன் அடைந்த போதும்

அவனைக் காப்பாற்றிய"நாமம்.. பகவானுக்கு

பிடித்த குழந்தை அவன்..... 

ஆண்டாள் தன்,பாசுரத்தில்

"நாராயணனே நமக்கே பறை,தருவான்.....


என்று, "ஏ" காரத்தில் பெருமை பொங்க சொன்ன நாமம்.

4வது நாமம்...."கோவிந்தா"

துச்சாசனன் பாஞ்சாலியை சபையில் துகிலுரித்த போது

நிர்கதியாக நின்ற அவளுக்கு கை"கொடுத்த நாமம்....

" தனது இரு கைகளையும் உயரத்"தூக்கி ""கோவிந்தா!! கோவிந்தா!!! எனக் கதறிய போது அவள் மானத்தைக் காப்பாற்றிய நாமம்.......


அன்றும், இன்றும், என்றும் திருமலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் நாமம்.......

5வது நாமம்...,"நரஸிம்மா"

 பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவனாம்.

"நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு.....

அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே

தூணைப் பிளந்து கொண்டு வந்தான்.....


" நீயே கதி" என சரணடைந்த அடியார்களுக்கு

உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பானாம்.

"ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னதே இல்லையாம்.

இந்த எளிமையான ஐந்து நாமங்களையும், எப்போதும் நாத்தழும்பேறக்"கூறுவோம்  . இந்த நாமங்கள்நம்மை உய்விக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.......

ஓம் நமோ நாராயணா நீயே கதி ஐயா 🙏🙏🙏

No comments:

Post a Comment