மறுமொழி தராததேனோ…….
பல்லவி
மறுமொழி தராததேனோ ஶ்ரீராமா
உறுதுணை நீயெனவே நம்பியுனைத் துதித்தேன்
அனுபல்லவி
நறுமண மலரணிந்த சீதையின் நாயகனே
பொறுமை நிறைந்தவனே கேசவனே மாதவனே
சரணம்
சிறு வயது முதலே பெரிய செயல் செய்தவனே
வெறுப்பு விருப்பில்லாது கடமைகள் புரிபவனே
பிறப்பிறப்புச் சுழலினின்று எனை விடுவித்திடும்
திறன் படைத்தவனே தினகர குலத்தோனே
அறம் தழைக்கும் அயோத்தி மாநகர் மன்னனே
குரங்கரசன் தோழனே பரவாசுதேவனே
சுரக்கும் வெள்ளமெனக் கருணை நிறைந்தவனே
பறக்கும் கருடனை வாகனமாய்க் கொண்டவனே
No comments:
Post a Comment