Saturday, 6 January 2024

கருட பகவானை…..

 


                            கருட பகவானை…..


                                   பல்லவி

                    கருட பகவானைப் பறவையரசனை

                    அருள் வேண்டி வணங்கி அனுதினம் துதித்தேன்

                                  அனுபல்லவி

                    திருமால் கேசவனை தினமும் சுமந்திடும்

                    பெருமைக்குரியவனை வினதையின் மகனை

                                     சரணம்

                    இரு சிறகை விரித்து காற்றை நடுங்கச் செய்யும்

                    பெரிய திருவடியை பந்தகாசனனை

                    அரவின் விடம் நீக்குமழகிய புள்ளரையனை

                    நரர் சுரர் சுரபதியனைவரும் வணங்கிடும்

                                      *****

அம்ருத கலசத்தை கையில் ஏந்தியவர். தேக காந்தி மிக்கவர். அனைத்து தேவதேவியர்களாலும் வணங்கப்படுபவர். இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க இயலாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுங்கச்செய்யும். இவரை உபாசித்தால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷ வியாதிகளும் விலகும். பக்ஷிராஜரான கருடபகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.


அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்

ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்

விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்

ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.

ஸ்ரீகருடாழ்வார்திருவடிகளே சரணம்🙏🙏🙏

No comments:

Post a Comment