உன்னாலென்ன குறை……
பல்லவி
உன்னால் என்ன குறை ஓ ஶ்ரீராமா
புன்னகையால் தாமரையைப் பழிக்கும் மன்னவனே
அனுபல்லவி
என்னாலன்றோ குறையனைத்தும் கோமகனே
முன்னாளில் நான் செய்த வினைப்பயனே கேசவனே
சரணம்
பொன்னில் மாற்று குறையென்ற காரணத்தால்
கொல்லனைக் குறை சொல்லி என்ன பயன்
உன்னைத் துதிக்காத உன் தாள் பணியாத
தன்னலம் கொண்ட தற்குறிகள் தவித்தால்
No comments:
Post a Comment