Monday, 1 January 2024

கமலமலரமர்……

  

                                             கமலமலரமர்……


                                              பல்லவி

                                    கமலமலரமர் மகாலக்ஷ்மியை

                                    அமரேந்திரன் துதித்த திருமகளைத் துதித்தேன்

                                           அனுபல்லவி     

                                    கமலக்கண்ணன் கேசவன் ப்ரிய சகியை

                                    கமலமலர்க் கரத்தாளை பத்மாசனியை

                                                சரணம்

                                    தனமனைத்தும் தருபவளை தனலக்ஷ்மியை

                                    அனந்தபத்மனாபனை துதித்திடச்செய்பவளை

                                    மனதுக்கு மகிழ்ச்சி தரும் சமுத்திரகுமாரியை

                                    வனமாலையணிந்தவனின் திருமார்பிலுறைபவளை


                                    அனங்கனைப் படைத்தவனின் அன்பில் திளைப்பவளை

                                    மனதுகினியவனின் மார்பணியாயிருப்பவளை

                                    வினதையின் மகனை வாகனமாய்க் கொண்டவனை

                                    புனிதமானவளை சந்திரனின் சோதரியை    


                                    கடல் மகளாய் பாற்கடலில் விளங்கும் திருமகளை   

                                    அடங்காத அரக்கர்களை அடக்கிடும் ராஜலக்ஷ்மியை       

                                    விட அரவின் மீதுறங்கும் மாலவன் கீழமரும் மகாலக்ஷ்மியை

                                    இடிக்கொடியோனுலகிலுறை சுவர்க்க லக்ஷ்மியை


                                   தினையளவு துதிப்பவர்க்கும் பனையளவு பலன் தரும்

                                   அனைவருக்கும் கருணையுடனன்னையாயிருப்பவளை

                                   வினப்பயன்கள் களைபவளை விரும்பும் வரம் தருபவளை

                                   முனைப்புடன் துதிப்போர்க்கு நலமனைத்துமளிப்பவளை

     

                                    

                                                                      

इन्द्रकृत लक्ष्मी स्तोत्र

इन्द्र उवाच

ऊँ नम: कमलवासिन्यै नारायण्यै नमो नम: ।
कृष्णप्रियायै सारायै पद्मायै च नमो नम: ॥1॥

पद्मपत्रेक्षणायै च पद्मास्यायै नमो नम: ।
पद्मासनायै पद्मिन्यै वैष्णव्यै च नमो नम: ॥2॥

सर्वसम्पत्स्वरूपायै सर्वदात्र्यै नमो नम: ।
सुखदायै मोक्षदायै सिद्धिदायै नमो नम: ॥3॥

हरिभक्तिप्रदात्र्यै च हर्षदात्र्यै नमो नम: ।
कृष्णवक्ष:स्थितायै च कृष्णेशायै नमो नम: ॥4॥

कृष्णशोभास्वरूपायै रत्नपद्मे च शोभने ।
सम्पत्त्यधिष्ठातृदेव्यै महादेव्यै नमो नम: ॥5॥

शस्याधिष्ठातृदेव्यै च शस्यायै च नमो नम: ।
नमो बुद्धिस्वरूपायै बुद्धिदायै नमो नम: ॥6॥

वैकुण्ठे या महालक्ष्मीर्लक्ष्मी: क्षीरोदसागरे ।
स्वर्गलक्ष्मीरिन्द्रगेहे राजलक्ष्मीर्नृपालये ॥7॥

गृहलक्ष्मीश्च गृहिणां गेहे च गृहदेवता ।
सुरभी सा गवां माता दक्षिणा यज्ञकामिनी ॥8॥

अदितिर्देवमाता त्वं कमला कमलालये ।
स्वाहा त्वं च हविर्दाने कव्यदाने स्वधा स्मृता ॥9॥

त्वं हि विष्णुस्वरूपा च सर्वाधारा वसुन्धरा ।
शुद्धसत्त्वस्वरूपा त्वं नारायणपरायणा ॥10॥


क्रोधहिंसावर्जिता च वरदा च शुभानना ।
परमार्थप्रदा त्वं च हरिदास्यप्रदा परा ॥11॥

यया विना जगत् सर्वं भस्मीभूतमसारकम् ।
जीवन्मृतं च विश्वं च शवतुल्यं यया विना ॥12॥

सर्वेषां च परा त्वं हि सर्वबान्धवरूपिणी ।
यया विना न सम्भाष्यो बान्धवैर्बान्धव: सदा ॥13॥

त्वया हीनो बन्धुहीनस्त्वया युक्त: सबान्धव: ।
धर्मार्थकाममोक्षाणां त्वं च कारणरूपिणी ॥14॥

यथा माता स्तनन्धानां शिशूनां शैशवे सदा ।
तथा त्वं सर्वदा माता सर्वेषां सर्वरूपत: ॥15॥

मातृहीन: स्तनत्यक्त: स चेज्जीवति दैवत: ।
त्वया हीनो जन: कोsपि न जीवत्येव निश्चितम् ॥16॥

सुप्रसन्नस्वरूपा त्वं मां प्रसन्ना भवाम्बिके ।
वैरिग्रस्तं च विषयं देहि मह्यं सनातनि ॥17॥

वयं यावत् त्वया हीना बन्धुहीनाश्च भिक्षुका: ।
सर्वसम्पद्विहीनाश्च तावदेव हरिप्रिये ॥18॥

राज्यं देहि श्रियं देहि बलं देहि सुरेश्वरि ।
कीर्तिं देहि धनं देहि यशो मह्यं च देहि वै ॥19॥

कामं देहि मतिं देहि भोगान् देहि हरिप्रिये ।
ज्ञानं देहि च धर्मं च सर्वसौभाग्यमीप्सितम् ॥20॥

प्रभावं च प्रतापं च सर्वाधिकारमेव च ।
जयं पराक्रमं युद्धे परमैश्वर्यमेव च ॥21॥

फलश्रुति:

इदं स्तोत्रं महापुण्यं त्रिसंध्यं य: पठेन्नर: ।
कुबेरतुल्य: स भवेद् राजराजेश्वरो महान् ॥

सिद्धस्तोत्रं यदि पठेत् सोsपि कल्पतरुर्नर: ।
पंचलक्षजपेनैव स्तोत्रसिद्धिर्भवेन्नृणाम् ॥

सिद्धिस्तोत्रं यदि पठेन्मासमेकं च संयत: ।
महासुखी च राजेन्द्रो भविष्यति न संशय: ॥

புரந்தர உவாச (தேவேந்திரன் சொன்னது):

நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோநம:

க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்மியை நமோநம:

தாமரையில் வசிப்பவளும், நாரணனின் தேவியான நாராயணியும் கிருஷ்ணனின் அன்புக்குரியவளும் ஆகிய மகாலட்சுமியை எப்போதும் போற்றி வணங்குகிறேன்.


பத்ம பத்ரேக்ஷணாயச பத்மாஸ்யாயை நமோ நம:


பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை நமோநம:


தாமரை இலையைப் போல் தனித்து நிற்பவளும்; மகாவிஷ்ணுவின் பத்தினியும் கமலமலரில் வீற்றிருப்பவளும் பத்மினியுமான வைஷ்ணவியைப் போற்றி வணங்குகிறேன்.


ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோ நம:


ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷதாத்ர்யை நமோநம:


எல்லாச் செல்வங்களின் வடிவமாகயிருப்பவளும், எல்லாராலும் போற்றப்படுபவளும், விஷ்ணுவின் மேல் பக்தி செலுத்துவதை ஊக்குவிப்பவளும், சந்தோஷத்தை அளிப்பவளுமான மகாலட்சுமிக்கு நமஸ்காரம்.


க்ருஷ்ணவக்ஷஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோநம:


சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே:


க்ருஷ்ணரின் மார்பில் வசிப்பவளும், கிருஷ்ணரை நிழல் போல் தொடர்பவளும், நிலவின் ஒளியையே தன்னுருவாகக் கொண்டவளும், செந்தாமரை போன்று பிரகாசிப்பவளுமான அலைமகளை மனமாரத் துதிக்கிறேன்.


ஸம்பத்யதிஷ்டாத்ஸ்தேவ்யை மஹாதேவ்யை நமோ நம:


நமோ விருத்தீ ஸ்வருபாயை வ்ருத்தி தாயை நமோ நம:


செல்வம் நிலையாக இருக்க வகை செய்பவளும்; மூன்று தேவிகளில் முக்கியமான தேவியும், வளத்தின் மொத்த உருவமும், வளமையுமே ஆனவளுமான தேவியைப் போற்றி வணங்குகிறேன்.


வைகுண்டே யா மஹாலக்ஷ்மி யாலக்ஷ்மி க்ஷீரசாகரே


ஸ்வர்க்க லக்ஷ்மி இந்த்ர கேஹே ராஜலக்ஷ்மி ந்ருபாலயேII


வைகுண்டத்தில் மகாலட்சுமியென்றும், பாற்கடலில் லட்சுமியென்றும், இந்திரனின் இருப்பிடத்தில் சொர்க்க லட்சுமி எனவும்; அரண்மனையில் ராஜ்யலட்சுமி என்றும் அழைக்கப்படுபவள் ஆகிய ஸ்ரீதேவியைப் போற்றி வணங்குகிறேன்.


க்ருஹலக்ஷ்மீச்ச க்ருஹ்ணா கேஹே க்ருஹ தேவதா.


ஸுரபி: ஸாகரே ஜாதா தக்ஷிணாயக்ஞ காமினிII


இல்லறத்தாரின் வீடுகளில் கிருஹ லட்சுமி என்ற கிரஹதேவதையாகவும், வாரி வழங்கும் காமதேனுவாகவும், சமுத்திரத்தில் தோன்றியவளும் வேள்வியின் பிரிய நாயகியான தட்சிணாவாக இருப்பவளுமான மகாலட்சுமியை நமஸ்கரிக்கிறேன்.


அதிதிர் தேவமாதா த்வம் கமலா கமலாலயா 


ஸ்வாஹா த்வம் ச ஹவிர் தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதாI


தாயே, நீயே தேவமாதாவான அதிதிதேவி. கமலாலயத்தில் வசிப்பவளான கமலாவும் நீயே. ஸ்வாஹா எனும் அக்னியின் தேவதையும், பித்ரு தேவதையான ஸ்வதாவும் நீயே!


த்வம் ஹி விஷ்ணு ஸ்வரூபா ஸர்வாதாரா வஸுந்தரா


சுத்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பராயணா


நீயே விஷ்ணு ஸ்வரூபியாக இருக்கிறாய். வழங்கும் சக்திகளில் பூமித்தாய், நீ. சுத்த சத்வ சொரூபம் நீயே. எப்போதும் நீ நாராயணனைப் போற்றுபவள்.


க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா


பரமார்த்த ப்ரதா த்வம் ஹரி தாஸ்ய ப்ரதா பரா


பொறாமை, துன்புறுத்தல், உயிர்களைக் கொல்லுதல் போன்றவற்றை நீ விரும்புவதில்லை. சாரதையாக ஒளியுடன் திகழ்பவள் நீ. வேண்டிய அனைத்தையும் அளிப்பவள் நீயே. மகாவிஷ்ணுவின் அருளைப் பெற உதவுபவள் நீயே.


ஸர்வே ஷாம் பராமாதா ஸர்வ பாந்தவ ரூபிணி


தர்மார்த்த காம மோக்ஷாணாம் த்வய ச காரணா ரூபிணி


எல்லோருக்கும் மேலான தாய். எல்லோருக்கும் உறவினளாக உருவெடுத்தவள். தர்மம், அர்த்தம் (பொருள்) காமம் (ஆசை) மோட்சம் (முக்தி) ஆகிய நான்கு குணங்களும் வருவதற்கும் அவை ஈடேறவும் நீயே காரணமானவள்.


யதா மாதா ஸ்தனாந் தானாம் சிசூனாம் சைசவே ஸதா


ததாத்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்யரூபத:


ஒவ்வொரு உயிரும் தாய்ப்பால் குடிக்கும் தருணம் முதல் கடைசி மூச்சு வரை எல்லாக் காலத்திலும் எல்லோருக்கும் தாயாக இருந்து அரவணைத்துக் காப்பவளான உனக்கு நமஸ்காரம்.


மாத்ருஹீன: ஸ்தனாந்தஸ்து ஸ ச ஜீவதீ தைவத:


த்வயா ஹீனோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிச்சிதம்


தாயை இழந்த சிசுக்கள், தாய்ப்பால் இல்லாவிட்டாலும் தெய்வ அனுக்ரஹத்தால் வாழ்கிறார்கள். ஆனால் உன்னருள் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? நிச்சயமாக உன்னருளால் தான் இது முடியும்.


ஸுப்ரஸன்ன ஸ்வரூபாத்வம் மாம் பிரஸன்னா பவாம்பிகே


வைரிக்ரஸதம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸனாதனி


எப்போதும் மகிழ்ச்சியும் புன்முறுவலுடனிருப்பவள் நீ. பவாம்பிகையே நீ காட்சி தந்து மகிழ்விக்க வேண்டும். சகலருக்கும் சமமான அருளைத் தருபவளே. எதிர்ப்பு என்பதேயில்லாத ஒரு நிலையை எனக்குக் கொடு அம்மா. (கேட்பது தேவேந்திரன். அவனுக்கு சதா எதிரிகள்... நாம் வறுமை எனும் எதிரி வரவேண்டாம் என நினைப்பது நல்லது.)


அஹம் யாவத் த்வயாஹீனோ பந்து ஹீனச்ச பிக்ஷீக:


ஸர்வஸம்பத் விஹினச்ச தாவதேவ ஹரிப்ரியே


ஞானம் தேஹி ச தர்மம் ச ஸர்வ சௌபாக்ய மீம்ஸிதக


ப்ரபாவம் ப்ரதாபம் ச ஸர்வாதிகார மேவ ச ஹரிப்ரியே


நான் தங்களுடைய கடாட்சம் இன்மையால் உற்றார் உறவினரின்றி அநாதை போல் எல்லா செல்வத்தையும் இழந்து உன்னையே கதியென்றிருக்கிறேன். நீயே எனக்கு ஞானத்தைக் கொடு. தர்மத்தை அருள். சர்வ சௌபாக்கியத்தையும், புகழ், கீர்த்தி மற்றும் அனைத்து அதிகாரத்தையும் கொடுத்து அருள்புரி.


ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைஸ்வர்ய மேவச 


இத்யுக்த்வா ச மஹேந்த்ரச்ச ஸர்வைஸ் ஸுர கணைங்ஸஹ


வெற்றி, வீரம், எதிரி பயமின்மை, சகல செல்வம் என யாவற்றையும் கொடு தாயே! (எல்லா தேவ கணங்களும் சூழ நின்று இவ்வாறு தொழுதான் மகேந்திரன்.)


ப்ரணநாம ஸாச்ருநேத்ரோ மூர்தன சைவ புன புன:


ப்ரஹ்மா சங்கரச்சைவ சேஷோ தர்மச்ச கேசவ:


கண்களில் நீர்வழிய தலைதாழ்த்தி நின்று மகாலட்சுமியை தேவர்களின் நலனை முன்னிட்டு இந்திரன் வணங்கினான். பிரம்மா, சங்கரன், ஆதிசேஷன், எமதர்மன், கேசவன் ஆகியோரும் உடனிருந்தனர்.


ஸர்வே சத்ரு: பரிஹாரம் ஸுரார்த்தே ச புன: புன:


தேவேப்யச்ச வரம் தத்வா புஷ்பமாலாம் மனோஹரம்


மனம் இரங்கி காட்சியளித்த கமலமகள் தேவர்களுக்கு வரம் கொடுத்ததோடு அழகிய, மனம் நிறைந்த மலர் மாலையைக் கொடுத்தாள்.


கேசவாய ததௌலக்ஷ்மி ஸந்துஷ்டா ஸுரஸம்ஸதி


யயுர் தேவாச்சஸந்துஷ்டா: ஸ்வம் ஸ்வம் ஸ்தாநம் கத:


தத்வா சுபாசிஷம் தௌ சதேவேப்ய: ப்ரீதிபூர்வகம்


இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யம் த்ரிசந்த்யம் ய: படேன் நரஹ


அதோடு, அலைமகள் சொன்னாள்... ‘‘தேவேந்திரா... உன்னால் இனிமையாகச் சொல்லப்பட்ட இந்த மகா புண்ணியமான துதியை எவர் தினமும் மூன்று முறை சொல்கிறார்களோ...


குபேரதுல்ய: ஸ பவேத் ராஜராஜேச்வரோ மஹாந் 


பஞ்ச லக்ஷ ஜபேனைவ ஸ்தோத்ர ஸித்தி பவேத்ருண:


அவர், குபேரனுக்கு சமமான செல்வம் பெறுவார். ஐந்து லட்சம் முறை இதைச் சொல்பவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரனாவார்.


ஸித்த ஸ்தோத்ரம் யதி படேத் மாசமேகந்து ஸந்தசும் 


மஹாஸு ச ராஜேந்த்ரோ பவிஷ்யதி ந ஸம்ஸய:


புனிதமான இத்துதியை எக்காலத்திலும் இடைவிடாது துதிப்பவர், சக்கரவர்த்திக்கு நிகரான செல்வங்களும் அரச வாழ்வும் பெறுவார் என்பது நிச்சயம். தேவேந்திர போகமும் குபேர சம்பத்தும் அவன் பெற நான் ஆசிபுரிவேன்!

No comments:

Post a Comment