ஶ்ரீராமா நீயே……
பல்லவி
ஶ்ரீராமா நீயே அந்த ரகசியத்தைச்சொல்வாயே
ஆராவமுதனே உனையன்றி யாரறிவார்
அனுபல்லவி
பாராளும் மன்னவனே பட்டாபி ராமனே
நாராயணன் நீயே கேசவனே மாதவனே
சரணம்
அன்னை கைகேயி நிலவினைக்காட்டியே
கன்னல் ராமனுக்கு இன்னமுதூட்டுகையில்
மன்னனவன் வெண்ணிலவைக் கையில்தரக்கேட்டா்ன்
புன்னகைத்தவளும் ஆடியைக் கையில் தந்தாள்
பாலகன் ராமனுக்கு வெண்ணிலவைக்காட்டி
கோலமுடன் அமுது செய்த தாய் கைகேயிக்கு
ஞாலமே தூற்றும் வண்ணம் கானகம் செல்ல வைக்கும்
சீலமில்லா எண்ணம் எப்படி வந்தது
No comments:
Post a Comment