பெருந்தேவித்தாயே…..
பல்லவி
பெருந்தேவித் தாயே அருந்தவச் செல்வியே
வருந்தித் துதித்திடுமெனக்கருள்வயே
அனுபல்லவி
பெருந்தேனிறைக்கும் மலர்க்குழலுடையவளே
விருந்தே வரதன் கேசவன் மனமகிழ்
சரணம்
அருந்தவ முனிவர்கள் போற்றித் துதித்திடும்
மருந்தே மாதவமே மலர்க்கரத்தாளே
பெரும் பிணி பவக்கடல் கடந்திடச் செய்திடும்
திருமகளுனையே தாள் பணிந்து வேண்டினேன்
No comments:
Post a Comment