- அவனே இவனே…..
- பல்லவி
அவனே இவனே எனத் தேடி அலையாமல்
சிவனே சிவனே என்றுனைத் துதித்தேனே
அனுபல்லவி
புவனம் உண்டுமிழ்ந்த கேசவன் நேசனே
தவம் செய்யும் முனிவர்கள் போற்றுமீசனே
சரணம்
மனமல்ல புத்தி சித்தமுமெதுவுமல்ல
கண் காது மூக்கெனுமவயவமுமல்ல
நிலம் நீர் நெருப்பு காற்று வெளியுமல்ல
சிவ ரூபமவனே சிவனே சிவனே
உயிர் மூச்சுமில்லை பூங்காற்றுமில்லை
எழு தாதுமல்ல ஐங்கோமுமல்ல
கை கால்கள் யோனி குதமும் நானல்ல
சிவ ரூபமவனே சிவனே சிவனே
விருப்பு வெறுப்பில்லை காமமுமில்லை
மத மாச்சர்யம் கோபமுமில்லை
அறம் பொருளின்பம் மோட்சமுமில்லை
சிவ ரூபமவனே சிவனே சிவனே
புண்ணியம் பாபம் இன்ப துன்பமெதுவுமில்லை
மறை மந்திரம் தீர்த்தம் வேள்விகளுமில்லை
உணவில்லை உணவாக்கி உண்பவனுமில்லை
தோற்றமும் மாற்றமும் உருவமுமெனக்கில்லை
உடலனைத்தும் இடமனைத்தும் எங்குமுள்ளேன்
இன்ப துன்பங்களில்லை மோட்சமுமில்லை
சிவ ரூபம்வனே சிவனே சிவனே
“நிர்வாணாஷ்டகம்”
मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं
न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे ।न च व्योम भूमिर्न तेजो न वायुः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥१॥
न वा सप्तधातुः न वा पञ्चकोशः ।
न वाक्पाणिपादं न चोपस्थपायु
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥२॥
मदो नैव मे नैव मात्सर्यभावः ।
न धर्मो न चार्थो न कामो न मोक्षः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥३॥
न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञाः ।
अहं भोजनं नैव भोज्यं न भोक्ता
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥४॥
पिता नैव मे नैव माता न जन्मः ।
न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यं
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥५॥
विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणाम् ।
न चासङ्गतं नैव मुक्तिर्न मेयः
चिदानन्दरूपः शिवोऽहम् शिवोऽहम् ॥६॥
No comments:
Post a Comment