பவானீ! தனது உடம்பெங்கும் யார் திருநீறு பூசிக் கொண்டு, நஞ்சினை உண்டு, நீண்ட திரித்த சடையுடன், கழுத்தில் நாகத்தை அணிந்து மண்டையோட்டை திரு வோடாய் கையில் ஏந்தியிருக்கிறானோ அவனே பசுபதி, உலகத்தின் தலைவன். அவன் எவ்வாறு சிறப்புற்றது? திருமணத்தில் உனது கரம் பற்றியதாலன்றோ!
நிலவொளி தவழும் முகத்தினளே! என்னிடம் மோட் சத்துக்கான விருப்பம் இல்லை, உலகாயத விருப்பங் களையும் நான் கொண்டிருக்கவில்லை. உலகியலறி வையோ, சவுகரியங்களையோ நான் தேடிக்கொண்டிருக்கவில்லை. உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் இதுதான் ம்ருதனி, ருத்ரணி, சிவசிவ பவானி' என்று தியானித்த படி இந்த வாழ்க்கையை நான் வாழ வேண்டும்.
வளரும்.... அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
நிலவொளி தவழும்…..
பல்லவி
நிலவொளி தவழும் திருமுகத்தாளே
லலிதாம்பிகையே பவானீ சரணம்
துரிதம்
நலந்தரும் நரர் சுரரும் நான்முகனுமிந்திரனும்
சனகசனந்தனரும் சரச்வதியும் திருமகளும்
நிலவுடன் கதிரவனும் கோள்களனைத்தும்
நலமுடன் வணங்கிடும் மலர்ப்பதமுடையவளே
அனுபல்லவி
உலகுண்ட வாயன் கேசவன் சோதரியே
பலவிதமான நாமங்களுடையவளே
சரணம்
திருவோடேந்தித் திருநீறணிந்து
கருநாகம் கழுத்தணிந்து நீண்ட சடையுடன்
திரிகின்ற ஆலமுண்ட நீலகண்டன் பசுபதி
சிறப்புற்றதுன் கரம் பற்றியதாலன்றோ
உலக ஞானமோ சுகமோ வேண்டேன்
லலிதே பவானி சிவே காமாக்ஷியென
பலவிதமான உன் நாமங்களோதி
நலமுடன் வாழும் வரமே வேண்டினேன்
No comments:
Post a Comment