Thanks ! Bumi Nathan !
நீயும் , நானும் ஸமஸ்த பிரபஞ்ச வடிவமும், எல்லா உலகமும் , எல்லா வஸ்துக்களும் , எல்லா தேவதைகளும் ஸ்ரீ திரிபுரசுந்தரியின் வடிவமே ஆகும். ஸ்ரீ லலிதை என்ற பெயருள்ள வஸ்து ஒன்று தான் உண்மை ! அது இரண்டற்றது. அது அகண்டார்த்த வடிவம் கொண்டது. யாவற்றிலும் மேன்மையாக விளங்கும் பரப்பிரம்ம வஸ்துவும் அதுவே தான் !
- பஹ்வ்ருசோபநிஷத்
தாயும் சேயுமாய்……
பல்லவி
தாயும் சேயுமாய் க்காட்சியளித்திடும்
தேயும் பிறையணிந்த மலைமகளுனைத் துதித்தேன்
அனுபல்லவி
ஆயர்குலத்துதித்த கேசவன் சோதரியே
தேயாத புகழ் மேவுமாதி பராசக்தியே
சரணம்
நீயும் நானும் பொருள்களனைத்தும்
மாயா உலகமும் அண்ட பேரண்டமும்
தாயே மகமாயே உன்னிலடக்கமென்றே
ஶ்ரீ லலிதாம்பிகையே திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment