எத்தனை…..
பல்லவி
எத்தனை தெய்வங்களிருந்தாலென்ன
அத்தனையும் கேசவனே உனக்கீடாகுமோ
அனுபல்லவி
வித்தகர் ஞானியர் வியந்தேத்தும் உத்தமனே
பத்து தலையரக்கன் ராவணனை வதைத்தவனே
சரணம்
நித்திலத் தொத்தெனும் பக்தவத்சலனே
சத்தியகிரி நாதனென திருமெய்யத்துறைவோனே
குத்தம் குறை ஏதுமிலா கோவிந்தனும் நீயே
கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாரணனே
No comments:
Post a Comment